சுத்தமாக தமிழ் எழுத தெரியாத ரஜினி.. மகள் செய்த காரியத்தை பார்த்தீங்களா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நேற்று அவருக்கு திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதற்காக தனது குரு பாலச்சந்தர் மற்றும் தன்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி கூறியிருந்தார் ரஜினிகாந்த்.
ரஜினி என்னதான் தமிழில் நன்றாக பேசினாலும் அவருக்கு சுத்தமாக தமிழ் எழுத தெரியாதாம். அவரது மகள் சௌந்தர்யாவுக்கு ஒருமுறை ரஜினிகாந்த் மெசேஜ் டைப் செய்து அனுப்பாமல், வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாராம். அப்போதுதான் சவுந்தர்யாவுக்கு ஒரு ஐடியா உதித்திருக்கிறது.
இந்த குறையை போக்க வேண்டும் என்பதற்காக படிப்பறிவில்லாதவர்கள் கூட பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய சோசியல் மீடியா ஆப் உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். ஹுட் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த செயலி படிப்பறிவில்லாதவர்களும் கூட தங்கள் குரலை பதிவு செய்து 60 நொடிகள் பதிவிடும் வகையில் உருவாக்கியிருக்கிறார்.
நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அந்த ஆப்-பில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நன்றி கூறி ஆடியோ வெளியிட்டிருக்கிறார். தனக்கு கிடைத்திருக்கும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு நன்றி கூறிய அவர் மகள் சௌந்தர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டர், ஃபேஸ்புக் போல இந்த செயலியும் அதிகம் பிரபலமாக வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ட்விட்டர் ஸ்பேஸஸ், க்ளப்ஹவுஸ் போன்ற பல தளங்கள் செயல்பட்டு வரும் நிலையில், ரஜினி மகள் கொண்டு வந்திருக்கும் ஆப் பாப்புலர் ஆகுமா?