கண்டக்டர் வெலையும் போச்சி!! கமல் - ஸ்ரீபிரியா போஸ்டரை பார்த்து கடுப்பான ஊரைவிட்டே ஓட முடிவெடுத்த ரஜினி..
சினிமா மோகத்தால் தான் பார்த்திருந்த பஸ் கண்டெக்டர் வேலைவை உதறி தள்ளி விட்டு சென்னையில் நடிப்பு பயிற்சியில் சேர்ந்து நடிப்பை கற்றுக்கொண்டவர் நடிகர் ரஜினி. அப்படி படித்துக்கொண்டிருந்த போது உட்லாண்ட்ஸ் ஹோட்டலில் சென்று சாப்பிட்டு வருவார் ரஜினி.
அப்படி ஒருமுறை போகும் போது கமல் - ஸ்ரீபிரியா நடித்த தங்கத்திலே வைரம் படத்தின் போஸ்டரை கட்ட ஏற்றிக்கொண்டிருந்தார்களாம். இதை பார்த்த ரஜினிக்கு இச்ச... நமக்கு இந்த மாதிரி எப்போது நடக்கும் என்று முனுமுனுத்தவாறு ஓட்டலுக்கு சாப்பிட போயுள்ளார்.
அதை பார்த்ததில் இருந்து ரஜினிக்கு ஒருவிதமான மனச்சோர்வு ஏற்பட்டு பெங்களூருக்கே செல்ல முடிவெடுத்து விட்டாராம். கண்டக்டர் வேலையையும் விட்டுடோம் எதிர்காலம் என்ன ஆகும் என்று தான் படித்த நடிப்பு பள்ளியில் ஒரு ஆசிரியரிடம் புலம்பி தள்ளிவிட்டாராம்.
அதற்கு அந்த ஆசிரியை உன்னிடம் நிறைய திறமை இருக்கு அதை பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார், எதிர்காலம் பற்றி யோசிக்காதே என்று ஆறுதல் கூறி விரக்தியில் இருந்த ரஜினி நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.