காதல் தோல்வியால் கதறி அழுத ரஜினி.. அந்த பெண்ணுக்காக உயிர் வாழ்கிறாராம்

Rajinikanth
By Kathick Dec 20, 2022 03:30 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நண்பரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்தின் இளம் வயது காதல் குறித்து பேசியுள்ளார். 

அவர் பேசியது :

" ரஜினிகாந்த் கண்டெக்டராக இருந்தபோது பேருந்தில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க துவங்கியுள்ளனர். இதன்பின், ஒரு நாள் என்னுடைய நாடகம் நடக்கிறது வந்து நாடகத்தை பார் என்று அந்த பெண்ணை ரஜினிகாந்த் அழைத்துள்ளார்.

நாடகத்தில் ரஜினியின் நடிப்பை கண்டபின் அந்த பெண் ஷாக்காகியுள்ளார். இதன்பின் ஒரு பிலிம் இன்ஸ்ட்யூட் ஒன்றில் ரஜினியை சேரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த பெண் கொடுத்த தெரியத்தினால் தான் ரஜினி பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேர்ந்தார். ஆனால், பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேருவதற்கு, பணத்துக்காக எங்கே செல்வது என்று ரஜினி திகைத்துப்போய் நின்றபொழுது, அந்த பெண் தான் ரஜினிக்கு பணம் கொடுத்து உதவினார்.

ஆனால், திடீரென ஒரு நாள் அந்த பெண் ரஜினியின் வாழ்க்கையில் இருந்து காணாமல் போய்விட்டார். ரஜினிகாந்த் கதறி அழுதார். நான் வாழ்வதற்கு ஒரே காரணம் அந்த பெண்ணை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதற்காக தான் என்று ரஜினி கூறினார் " என இவ்வாறு ஸ்ரீவாசன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.