அண்ணன் வீட்டில் ஐஸ்வர்யா ராயால் அசிங்கப்பட்ட சூப்பர் ஸ்டார்!! மேடையில் உண்மையை கூறிய ரஜினிகாந்த்

Rajinikanth Aishwarya Rai Shankar Shanmugam Gossip Today
By Edward Feb 11, 2023 03:35 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு பல ஆண்டுகளாக பல கோடி ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்த ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அண்ணன் வீட்டில் ஐஸ்வர்யா ராயால் அசிங்கப்பட்ட சூப்பர் ஸ்டார்!! மேடையில் உண்மையை கூறிய ரஜினிகாந்த் | Rajini Share Aishwarya Rai My Heroine Enthiran

சில ஆண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான படம் எந்திரன். இப்படத்தின் நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்த் மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் காமெடியாக பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில், பெங்களூரில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு சென்ற போது ராஜஸ்தானை சேர்ந்த நந்துலால் என்ற பக்கத்து வீட்டுக்கு வந்து அறிமுகப்படித்தினார். குடும்பத்துடன் வந்த நந்தலாலுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். அவர் என்னிடம், என்ன ரஜினிகாந்த் உன் தலை முடிக்கு என்ன ஆச்சி, சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று ஜாலியாக இருக்கிறாயா என்று கேட்டார்.

அண்ணன் வீட்டில் ஐஸ்வர்யா ராயால் அசிங்கப்பட்ட சூப்பர் ஸ்டார்!! மேடையில் உண்மையை கூறிய ரஜினிகாந்த் | Rajini Share Aishwarya Rai My Heroine Enthiran

அதற்கு நான் தலை முடி கொட்டிவிட்டது. தற்போது எந்திரன் என்ற படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறினேன். அதற்கு நந்துலால், யார் ஹீரோயின் யார் ஹீரோ என்று கேட்டார். நான் அதற்கு, ஐஸ்வர்யா தான் ஹீரோயின் நான் ஹீரோ என்று கூறினேன். உடனே அவர் ஷாக்காகி, நீ ஹீரோவா, என்று ஒருவார்த்தை பேசாமல் இருந்தார்.

அதன்பின் அவர் செல்லும் போது ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு, அது இருக்கட்டும் அபிஷேக் பச்சனுக்கு என்ன ஆச்சு, ஓகே அது இருக்கட்டும் அமிதாப் பச்சனுக்கு என்ன ஆச்சு, ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா என்று என் காதுபட பேசிக்கொண்டே சென்றார்.

இந்த சம்பவத்தை காமெடியாக ரஜினிகாந்த் கூறினாலும், தன்னை ஒருவர் அசிங்கப்படுத்தியதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டதை பலர் பாராட்டியிருந்தனர்.


Gallery