இந்த நடிகையையும் விட்டு வைக்காத ரஜினிகாந்த்.. கரண்ட் கட் ஆனதால் எல்லாமே போச்சு
திரையுலகில் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. கடைசியாக வெளிவந்த லால் சலாம் திரைப்படம் மாபெரும் தோல்வியடைந்தது. நடிகர் ரஜினிகாந்த் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியை காதலித்த சம்பவம் குறித்து திரையுலகில் உள்ள பலருக்கும் தெரியும்.
ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் முதல் முறையாக மூன்று முடிச்சு திரைப்படத்தில் தான் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நடிக்கும்போது ரஜினிக்கு 25 வயது, ஸ்ரீ தேவிக்கு 13 வயது தான். இதன்பின் இருவரும் இணைந்து 22 படங்கள் ஜோடியாக நடித்தனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினருடன் நல்ல உறவு கொண்டிருந்தார். அந்த வகையில் ஸ்ரீதேவியின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு ரஜினிகாந்த சென்றுள்ளார். ரஜினிக்கு நடிகை ஸ்ரீதேவியை மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் கிரகப்பிரவேசத்தின் போது ஸ்ரீ தேவியை பெண் கேட்டு செல்லலாம் என முடிவு செய்துள்ளாராம் ரஜினிகாந்த்.
ஆனால், கிரகப்பிரவேசத்தின் போது மின்வெட்டு ஆனதால் இந்த நேரம் சரியில்லைஎன பெண் கேட்பதை தவிர்த்துவிட்டாராம் ரஜினிகாந்த். அதோடு அவருடைய காதலும் முடிவுக்கு வந்துவிட்டதாம். இந்த தகவலை ரஜினியை அறிமுக செய்த இயக்குனர் கே. பாலசந்தர் பேட்டி ஒன்றில் கூறியதாக சொல்லப்படுகிறது.