திருமணத்திற்கு மீறி வந்தா உதைப்பேன்..விருந்தும் வைத்து எச்சரித்த ரஜினிகாந்த்..
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், 1981ல் லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு பெண் குழந்தைகளை பெற்றார். தற்போது ரஜினி - லதா திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமணத்திற்கு யாரும் வரக்கூடாது என்று பத்திரிக்கையாளர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து கண்டீஷன் போட்டுள்ளார் ரஜினிகாந்த். இதனால் பத்திரிக்கையாளர்கலுக்கும் அவருக்கும் இடையே மோதலே ஏற்பட்டதாம். பத்திரிக்கையாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசுகையில் இதுகுறித்து பகிர்ந்துள்ளார்.
திருப்பதியில் கல்யாணம்
ரஜினிகாந்தின் திருமண அறிவிப்பின் போது அவருக்கும் பத்திரிக்கையாளருக்கும் இடையே ஒரு சிறய உரசல் ஏற்பட்டது. ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதாவை முதன்முதகில் தில்லு முள்ளு படப்பிடிப்பின்போது தான் சந்தித்தார். ரஜினியை பேட்டி எடுப்பதற்காக லதா, நடிகை செளகார் ஜானகி வீட்டிற்கு வந்தார். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

முதல் சந்திப்பிலேயே லதாவை தன் மனைவியாக நினைத்தாலும் பல மாதங்களுக்குப் பின் தான் முடிவானது. தன்னுடைய திருமணத்தை திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறையில் நடத்த ரஜினி விரும்பினார். அதிகாலை வேளையில் கூட்டம் இல்லாமல் அமைதியாக நடத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது என்றும் அவரது நோக்கமாக இருந்தது.
நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளவும் பத்திரிக்கையாளர்களை தவிர்க்கவும் நினைத்தார். 1981 பிப்ரவரி 25ல் பத்திரிக்கையாளர்களுக்கு தன்னுடைய வீட்டில் விருந்தளித்தார் ரஜினி.

அப்போது ரஜினி, என் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்டவன் நான், மூட்டை சுமந்துகூட பிழைத்திருக்கிறேன். என் வாழ்வில் வசாந்தம் வீசியது தில்லு முள்ளு படப்பிடிப்பின் போதுதான். லதாவின் குணங்களை தெரிந்துகொள்ளவும், என் சகோதரரின் சம்மதத்தை பெறவும் சில காலம் தேவைப்பட்டது.
என் மனைவி லதாவுக்கு முழு சுந்ததிரம் உண்டு. அவர் சினிமாவில் நடிக்க விரும்பினால்கூட எனக்கு ஆட்சேபனை இல்லை. எங்கள் திருமணம் அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதி கருவறையில் நடக்கிறது. எளிமையாக நடத்துவதால் நான் பத்திரிக்கைகூட அடிக்கவில்லை.
உதைப்பேன்
திருமணத்திற்கு நீங்கள் யாரும் வரவேண்டாம் என்றார். அப்போது நிருபர் ஒருவர், திருமணத்தை புகைப்படம் எடுக்க திருப்பதிக்கு வரலாமா? என்று கேட்க ரஜினி ஏற்கனவே லதாவுடன் இருக்கும் புகைப்படங்களை கொடுத்து, இதை இப்போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு வரும் அப்போது நீங்கள் புகைப்படம் எடுக்கலாம், ஆனால் திருமணத்திற்கு வரவேண்டாம் என்றார். அப்போது நிருபர் ஒருவர், மீறி வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்க, டென்ஷனான ரஜினி, உதைப்பேன் என்று கூறினார்.
அப்படி அவர் கூறுகையில் மூத்த பத்திரிக்கையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பின் ரஜினி தன்னுடைய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டாலும் யாரும் வரவேண்டாம் என்பதில் உறுதியாக இருந்து திருமணத்தை முடித்தார்.
கடும் எச்சரிக்கையும் மீறி சில புகைப்படக்கலைஞர்கள் சூழ்ந்திருந்ததை பார்த்து மிகுந்த கோபத்தில் இருந்தார் ரஜினி. உறவினர்கள் சமாதானப்படுத்தி அவரை அங்கிருந்து அழைத்துச்சென்றுள்ளனர்.