ஸ்ரீதேவி ஹீரோயினா..வாய்ப்பே இல்லனு சொன்ன இயக்குநர்!! ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்..
ரஜினி - ஸ்ரீதேவி
ரஜினி, கமல் உள்ளிட்ட பல டாப் சூப்பர் ஸ்டார் ஹீரோக்களுக்கு ராசியான ஹீரோயினாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக திகழ்ந்த ஸ்ரீதேவி பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மிதுன் சக்ரபர்த்தி நடிப்பில் இந்தியில் வெளியான ப்யார் ஜுக்தா நஹி என்ற படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பி உரிமையை இயக்குநர் துவாரகீஷ் வாங்கினார். தன் நண்பர் ரஜினியை ஹீரோவாக வைத்து அப்படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்து பேச்சுவார்த்தையும் நடத்தினார் இயக்குநர் துவாரகீஷ்.
அப்படத்தின் ரஜினி ஏற்கனவே பார்த்திருந்ததால் ரீமேக்கில் நடிக்க விருப்பம் என்று சொன்னார். அப்போது ரஜினி, நண்பா உங்கள் படத்தில் நான் நடிக்கிறேன், ஆனால் எனக்கு ஜோடியாக ஸ்ரீதேவியை நடிக்க வைக்க வேண்டும்? முடியுமா என்று கேட்டுள்ளார். அப்போது பாலிவுட்டில் பிஸியாக இருந்த ஸ்ரீதேவியால் தமிழில் நடிக்க முடியாது என்றார் துவாரகீஷ்.

நான் அடிமை இல்லை
இதைக்கேட்ட ரஜினியோ ப்யார் ஜுக்தா நஹி படத்தில் வந்த காதல் பாடலை பார்த்தபோது நானும், ஸ்ரீதேவியும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வைத்தேனே, நான் அவரிடம் டேட்ஸ் கேட்ட்கிறேன் என்று ரஜினி இயக்குநரிடம் கூறியிருக்கிறார்.
இதன்பின் ரஜினிகாந்தே ஸ்ரீதேவியை தொடர்பு கொண்டு நாம் சேர்ந்து படம் பண்ணலாம் டேட்ஸ் கொடுங்கள் என்று கேட்க, முடியாது என்று சொல்லாமல் ரஜினி படத்திற்காக டேட்ஸ் அட்ஜெஸ்ட் செய்து கொடுத்துள்ளார். அப்படி 1986ல் உருவான படம் தான் நான் அடிமை இல்லை.

அதன்பின் இருவரின் கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடிக்க ரியல் ஜோடியாவார்கள் என்றும் எதிர்ப்பார்த்தனர். ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை கல்யாணம் செய்ய பெண் கேட்க சென்றபோது, மின்தடை ஏற்பட, அபசகுணம் என்று நினைத்து ரஜினி தன் மனதில் இருந்த ஆசைய சொல்லாமலேயே திரும்பி வந்துள்ளார். அதன்பின் ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.