இப்படியொரு காரியத்தை செய்த சூப்பர் ஸ்டார்! மொத்தமும் காலி பண்ணிட்டாரே..
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆர் பி செளத்ரியின் சிஷ்யப்பிள்ளையாக இருந்து 1990ல் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் புரியாத புதிர். இப்படத்தினை தொடர்ந்து சேரன் பாண்டியன், புருச லட்சனம், சக்திவேல், நாட்டாமை போன்ற படங்களை கொடுத்து வந்தார்.
ரவிக்குமாரின் படம்
அதன்பின் முத்துகுளிக்க வாரிங்களா, பெரிய குடும்பம் போன்ற படங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை வைத்து முத்து படத்தினை இயக்கினார். அப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து படையப்பா, கமலின் தெனாலி, விஜய்யின் மின்சார கண்ணா, அஜித்தின் வில்லன், வரலாறு போன்ற படங்களை இயக்கினார். அதன்பின் தசவதாரம், மன்மதன் அன்பு போன்ற படங்களை இயக்கினார்.
லிங்கா பிளாப்
இப்படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த்-ஐ வைத்து லிங்கா படத்தினை 2014ல் இயக்கி வெளியிட்டார். ராக்லின் எண்டர்டைன்மெண்ட் தயாரித்த இப்படம் படுமோசமான விமர்சனத்தை பெற்றதோடு 100 கோடி பட்ஜெட்டில் 154 கோடி வரை தான் வசூலித்திருந்தது. ரஜினிகாந்த் படத்திலேயே எந்திரன் படத்திற்கு பிறகு பட்ஜெட்டுக்கு குறைவான லாபத்தை பெற்ற படமாக லிங்கா அமைந்தது. இப்படம் குறித்து இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஒரு ரகசியத்தை மறைமுகமாகி கூறியுள்ளார்.
கிளைமேக்ஸை மாற்றிய சூப்பர் ஸ்டார்
வேற வழியில்லாமல் தான் கிளைமேக்ஸ் காட்சி நடந்தது. முதலில் பலூன் காட்சியே இல்லை. அதன்பின் எடிட்டரிடம் எதையும் தூக்க வேண்டாம், லிங்கேசன் தான் ஹீரோ, ஒரே ரீலில் முடியுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தெரிவித்தார்.
எனக்கும் என்னுடைய உதவி இயக்குனர்களுக்கு அது பிடிக்கவே இல்லை. பிறந்த நாளுக்கு வெளியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அப்படம் அவரின் விருப்பதுடன் எடுத்த கிளைமேக்ஸ் காட்சியோடு வெளியானது.
அதன்பின் தான் சங்கர் போல் தான் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். படம் புடித்த பின் தான் படத்தின் ரிலீஸ் தேதியை சங்கர் வெளியிடுவார் என்பதை கூறியுள்ளார் கே எஸ் ரவிக்குமார். லிங்கா படம் தோல்விக்கு இயக்குனரை குறை கூற முடியாது எல்லாம் ரஜினிகாந்த்-ஆல் தான் போச்சு என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.