திருமணமான நடிகைக்காக இந்த அளவிற்கு இறங்கிய சூப்பர் ஸ்டார்! அப்படி என்னதான் இருக்கு?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது. அதற்கு பல இயக்குனர்கள் பெயர் அடிப்பட்டது. அப்படி இருக்கும் நிலையில் டாக்டர், மாஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாரை புக் செய்து அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோவை வெளியிட்டது.
இந்நிலையில் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக யார் என தேர்வு செய்வது ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளாராம். அதற்கு நடிகை ஐஸ்வர்யா ராய்யை புக் செய்யுங்கள் என்று கூற அவரின் சம்பளத்தை கேட்டு தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியாகியுள்ளதாம்.
நாங்கள் ஐஸ்வர்யா ராயிற்கு 10 சம்பளமாக கொடுத்து புக் செய்தால் உங்கள் சம்பளத்தில் 20 கோடியை குறைக்கிறீர்களா என்று கண்டீஷன் போட்டுள்ளார்களாம். இதற்கு ஒப்புக்கொண்டு 100ல் இருந்து 80 கோடியாக சம்பளத்தை குறைத்துள்ளாராம் ரஜினி.
ஆனால் படத்தின் லாபத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்றும் படம் நன்றாக ஓடினால் கிட்டத்தட்ட 130 கொடியளவில் வசூல் செய்யலாம் என்ற பிளானும் போட்டு கூறியுள்ளாராம். இதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒப்புதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.