நோ கமெண்ட்ஸ்!! கையெடுத்து கும்பிட்டு சென்ற ரஜினிகாந்த்...

Rajinikanth Jailer Election Tamil Nadu Election 2026
By Edward Apr 04, 2026 01:15 PM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், தொகுதி பங்கீடுகளை முடித்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் அரசியல் குறித்து சினிமா பிரபலங்களிடம் கருத்துக்கள் கேட்டு வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்திடன் தேர்தல் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், கமலுடன் இணைந்து மற்றொரு படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

நோ கமெண்ட்ஸ்

இந்நிலையில் வெளியில் வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர் ஒருவர், தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ரஜினிகாந்த் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே கையெடுத்து கும்பிட்டு சென்றார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு போவீர்களா? என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்ற ஒற்றை வார்த்தையுடன் கிளம்பியிருக்கிறார்.