ஒருமாதம் தான் இருப்பார்..மாரடைப்பால் லிவிங்ஸ்டன் மனைவி!! ரஜினி செய்தது என்ன தெரியுமா?
லிவிங்ஸ்டன் மனைவி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வரும். அப்படி 75 வயதில் தற்போது வரை நடித்து வரும் ரஜினிகாந்த், நடிகர் லிவிங்ஸ்டனுக்கு செய்த ஒரு சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

நடிகரும் இயக்குநருமான லிவிங்ஸ்டன் மனைவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இன்னும் ஒரு மாதம்தான் இருப்பார், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், பணம் கட்டுங்கள் என்று மருத்துவர் சொல்லியுள்ளார்.
ரஜினி
அந்த பெரிய தொகை அப்போது லிவிங்ஸ்டனிடம் இல்லை. இந்த விஷயம் ரஜினியின் காதுக்கு செல்ல, உடனடியாக ரூ. 15 லட்சத்தை லிவிங்ஸ்டனிடம் கொடுத்து உதவியிருக்கிறார் ரஜினி, நல்லபடியாக அறுவை சிகிச்சை முடித்து இன்று ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ரஜினி உதவியதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறதாம்.

அதாவது ரஜினியின் கரியர் முடிந்துவிட்டது என்று 80களில் டாக் வந்தபோது தர்மயுத்தம் என்ற படமும், அலெக்ஸ் பாண்டியன் படமும் அவருக்கு தரமான கம்பேக்கை கொடுத்தது.
அந்த இரு படங்களுக்கும் கதாசிரியராக லிவிங்ஸ்டனின் மனைவியுடைய சகோதரர் பீட்டர் செல்வக்குமார் இருந்துள்ளார். அவரால் தான் தன்னுடைய கம்பேக் நடந்ததால், அந்த நன்றியை மறக்காமல் இந்த உதவியை செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.
