மிகவும் டல் புக்கிங்கில் ஜெய்லர் 2, அதுவும் ரஜினி கோட்டையிலேயே இப்படியா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஜெய்லர் 2.
இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்க, ரூ 1000 கோடி வசூலை இப்படம் செய்யும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது இப்படத்தின் முன்பதிவு இதற்கான சாத்திய கூறுகள் குறைவு என்பது போல் காட்டுகிறது.

மெகா ஹிட் ஆன ஜெய்லர் படத்தின் இரண்டாம் பாகம், அதனால் இப்படம் ரூ 150 கோடிகளுக்கு மேல் முதல் நாள் வசூல் வரும் என நினைத்த நிலையில், தற்போது ரூ 100 கோடி வரை தான் முதல் நாள் வசூல் வரும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதிலும் ரஜினியின் கோட்டையாக கருதப்படும் அமெரிக்காவில் கூலி 2 மில்லியன் டாலர் முன்பதிவை தாண்ட, ஜெய்லர் 2 தற்போது வரை 8 லட்சம் டாலர் தான் முன்பதிவு ஆகியுள்ளதாம், இதன் மூலம் அமெரிக்காவில் ஜெய்லர் 2 நல்ல விமர்சனம் வந்தால் மட்டுமே தப்பிக்கும், இல்லையெனில் பெரிய அடி தான் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.