சில நிமிடங்கள் மட்டுமே நடிக்க இத்தனை கோடி சம்பளமா.. ரஜினியால் பதறிப்போன தயாரிப்பாளர்..

Rajinikanth Aishwarya Rajinikanth
By Kathick Sep 17, 2023 02:30 AM GMT
Report

ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தை அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ரஜினிகாந்த் ரூ. 40 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதை கேட்டு தயாரிப்பாளர் ஷாக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில நிமிடங்களில் நடிக்க ரூ. 40 கோடி சம்பளமா, எல்லாமே ஜெயிலர் கொடுத்த மாபெரும் வெற்றி தான் காரணம். ரஜினி காட்டுல இனி அடைமழை தான்.