ரஜினிகாந்துக்கு இது எத்தனையாவது இன்னிங்ஸ்!! எப்பவும் நாட் அவுட் சூப்பர் ஸ்டார் தான்..ஏன் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 70 வயதை கடந்தாலும் அதே கம்பீரத்துடன் நடித்து வருகிறார். அவ்வளவு தான் வயசாகிடிச்சு, எத்தனை நாளைக்குத்தான் இந்த குதிர ஓடும் என்று பலர் அவரை விமர்சிக்கும் விமர்சனங்கள் பல ஆண்டுகள் முதல் இன்று வரை பரவி வரும். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையில் தோல்வியை சந்தித்திருந்தாலும் மார்க்கெட்டில் இப்போதுவரை முதல் இடத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்.
தற்போது கூலி படத்தினை தொடர்ந்து 172வது படமான ஜெயிலர் 2வில் நடித்து வருகிறார். அவர் அறிமுகமாகி 50 ஆண்டுகளாகிறது. 75 வயதாகிறது. இதனால் கூலி, ஜெயிலர் 2 படங்களுக்கு பின் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் அவரது மனைவி லதா அதற்கு மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
எத்தனையாவது இன்னிங்ஸ்
இது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சரி, ரஜினிகாந்த் ஏன் சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்று இட்டுக்கட்டி விடுகிறார்கள். இது மற்ற நடிகர்களுக்கு நடப்பதில்லையே ஏன்?. ரஜினிகாந்த் இதற்குமுன் அவ்வப்போது சினிமாவில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த சூழலை எல்லாம் எதிர்கொண்டப்பின் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். உயிருக்கே ஆபத்தான சூழல் வந்தபோதும் அமெரிக்காவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சி பெற்றப்பின் கூட ஆக்ஷன் படத்தில் நடித்தார். அதேபோல் அரசியலில் நுழைந்து அதன்பின் வெளியே வந்தார்.
நாட் அவுட் சூப்பர் ஸ்டார்
அப்படி இருந்தும் அவருக்கே சினிமாவில் இருந்து விலகலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம், அதிலிருந்து அவரே கூட தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு நடிக்க முடிவு எடுத்திருக்கலாம். எனவே, இது எத்தனையாவது இன்னிங்ஸ் என்று அவருக்குத்தான் தெரியும்.
அன்றும் இன்றும் என்றும் அவர் மட்டுமே தமிழ் சினிமாவின் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார். அவர் என்றைக்குமே நாட் அவுட் பேட்ஸ்மேன் போல், அவர் எப்போது தமிழ் சினிமாவின் நாட் அவுட் சூப்பர் ஸ்டார் தான். அவரோட ஓடிய பல குதிரைகள் சினிமாவில் இருந்தே கிட்டத்தட்ட விலகிவிட்ட நிலையில், அவர் தொடர்ந்து ஓடுகிற குதிரையால் ஓய்வெடுக்காமல் இருக்கிறார்.