சூப்பர் ஸ்டாரை வைத்து இப்படியொரு காப்பி படமா? என்ன நெல்சா இதெல்லாம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்திற்கு பிறகு யார் இயக்குனர் என்ற கேள்வி எழுந்து வந்த சூழலில் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சனை கமிட் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர் சன் பிக்சர்ஸ்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் படுமோசமான விமர்சனத்தையும் கேலிகிண்டலை சந்தித்தது. இதனால் நெல்சன் மீது இருந்த நம்பிக்கை சற்று ரஜினிகாந்த் ரசிகர்க்ளிடம் சந்தேகத்தை எழுப்பியது.
ஆனால் ரஜினி நம்பிக்கையோடு நெல்சன் தான் என்னுடைய 169வது படத்தினை இயக்க வேண்டும் என்று கூறி இப்படத்தின் டைட்டிலோடு அதிகார்பூர்வமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என்ற பெயரில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இந்நிலையில் ஜெய்லர் படம் ஹாலிவுட் படமான எஸ்கேப் பிளான் படத்தின் காப்பி என்று பலர் இணையத்தில் கூறி வருகிறார்கள்.
#Thalaivar169 is #Jailer@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/tEtqJrvE1c
— Sun Pictures (@sunpictures) June 17, 2022