ஜோதிகாவை மிஞ்சிய நடிகை யார்.. அப்பவே உதறிய சூப்பர் ஸ்டார்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா பிரபு உள்ளிட்ட முன்னணி நடசத்திரங்கள் நடித்து 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசுவால் இயக்கி வெளியான படம் சந்திரமுகி.
இப்படம் வெளியாகி 500க்கும் அதிகமான நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனை பெற்றது. சமீபத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால், அதில் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். அதற்காக கதையையே மாற்றி படுதோல்வியை சந்தித்தார். அதிலும் கங்கனா ரணாவத் சந்திரமுகியாக நடித்தது மிகப்பெரிய நெகடிவ் விமர்சனத்தை பெற காரணம்.
பல மொழிகளில் வெளியாகி 50 கோடி வசூலை ஈட்டியது என்று கூறினார்கள். ஆனால் படத்தை பார்த்தவர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். ரஜினி தூக்கி எறிந்த போதே தெரியாதா, ஜோதிகா நடிக்கலன்னு சொன்ன போதே தெரியாதா..
படம் அட்டர் ஃப்ளாப்ன்னு. அதுவும் கங்கனா ரணாவத் நடிப்பு, ஜோதிகாவின் கால் தூசுக்கு வருமா.. என்றும் கலாய்த்தார்கள்.