விக்ரம் ஹிட்.. பொறாமையில் ரஜினி தரப்பு இப்படி செய்கிறதா?
                                    
                    Kamal Haasan
                
                                                
                    Rajinikanth
                
                        
        
            
                
                By Parthiban.A
            
            
                
                
            
        
    விக்ரம் என்ற ஒரே ஒரு படம் மூலமாக தற்போது தமிழ் சினிமா மார்க்கெட்டை மீண்டும் சூடு பிடிக்க வைத்து இருக்கிறார் கமல்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி இருக்கிறது.
இந்த வெற்றி மூலமாக தற்போது மீண்டும் ரஜினி vs கமல் போட்டி தொடங்கி இருக்கிறது. விக்ரம் பிரம்மாண்ட ஹிட் ஆகி இருப்பதாக தொடர்ந்து வசூல் விவரங்கள் வந்துகொண்டிருக்க தற்போது திடீரென ரஜினியின் சிவாஜி படம் 15 வருடங்கள் கடந்து இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இத்தனை வருடங்கள் இல்லாமல் தற்போது ஏன் திடீரென சிவாஜி படத்தை கொண்டாட வேண்டும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கமல் வெற்றி கொடுத்து இருக்கும் நிலையில் அவருக்கு போட்டியாக தான் ரஜினி தரப்பு இதை எல்லாம் செய்கிறதோ?
