பைசன்-ஓட அக்காவா இது!! ஐட்டம் பாடலுக்கு இப்படி ஆட்டம் போட்ட ரஜிஷா..
ரஜிஷா விஜயன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளியான படம் தான் பைசன். இப்படத்தில் கதாநாயகனின் அக்கா ரோலில் நடிகை ரஜிஷா விஜயன் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதற்கு முன் கர்ணன், ஜெய்பீம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் ரஜிஷா. கடந்த ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான களம் காவல் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து இளசுகளின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில், சமந்தா போல் சட்டென்று ஒரு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி ஆடையணிந்து குத்தாட்டம் போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மலையாள இயக்குநர் கிரிஷாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள மஸ்திஸ்கா மரணம் என்ற படத்தில் கோமல தாமரா என்ற ஐட்டம் பாடல் இடம்பெற்றுள்ளது.

இப்பாடலில் தான் ரஜிஷா விஜயன் ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறார். அவரது உடல் அசைவுகளை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்தும் ஹார்ட்டின் எமோஜியை பதிவிட்டும் வருகிறார்கள்.