பிக் பாஸ் ஜெயிச்சு என்ன பிரயோஜனம்.. கண்னால் பெரிய வாய்ப்பை பறிகொடுத்த ராஜு!

Bigg Boss Shankar Nanban Raju
By Parthiban.A Jan 23, 2022 08:30 AM GMT
Report

பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் ஜெயித்திருக்கிறார் ராஜு. அவர் ஷோ முடிந்து வெளியில் வருவதற்கு முன்பே அவருக்கு சில பல பட வாய்ப்புகள் வந்து விட்டது என சமூக வலைத்தளத்தில் டிராக்கர்கள் செய்தி பரப்பினார்கள். தான் தற்போது படங்களுக்காக பேச்சுவார்த்தையில் இருப்பதாக ராஜுவே பேட்டி அளித்திருக்கிறார்.

அதே நேரத்தில் அவர் ஒரு மிக பிரமாண்ட படத்தை தவறவிட்ட செய்தியும் இப்போது வெளிவந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படம் தான் அது.

அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சென்டிமீட்டர் என்ற ரோலில் நடிப்பதற்காக ராஜு ஷங்கரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால் ஷங்கர் அவரை பார்த்துவிட்டு அவரது கண்கள் பெரிதாக இருக்கிறது என சொல்லி நிராகரித்து விட்டாராம்.

அதற்குக் காரணம் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்த மில்லிமீட்டர் என்ற பையன் ராஜுவின் தோற்றத்திற்கும் கண்களுக்கும் ஒத்துப்போகவில்லை என்பதுதான். ராஜு இப்படி மிகப்பெரிய வாய்ப்பை தவற விட்டு விட்டாரே என ரசிகர்கள் வருத்தப்பட்டு சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.