நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகிய ரக்ஷிதா ! பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்களா?

actress biggboss serial biggbosstamil5 rakshitha
By Edward Aug 31, 2021 10:00 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 4 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் பிக்பாஸ் இடம் பிரம்மாண்டமான அளவில் வேலைகள் நடந்து கொண்டு வருகிறதாம்.

இந்நிலையில், பிக்பாஸ் 5க்கிற்கான போட்டியாளர்களின் தேர்வு நடந்து கொண்டு வருகிறது. அதில் பெரியளவில் பேசப்படும் பிரபலமாக இருப்பவர் ஷகிலா மகள் மிளா, புகழ், கனி திரு, ரம்யா கிருஷ்ணன், ஜிபி முத்து, சாந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி போன்றவர்களும், இர்ஃபான், பாலாஜி போன்ற ஆண் மாடல், சிம்பு ரெக்கமெண்ட்டில் ஒருவர் என்று லிஸ்ட் வைத்துள்ளனர்களாம்.

அதேசமயம் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் கதாநாயகி நடிகை ரக்ஷிதா இடம் பெறுகிறாராம். ஏற்கனவே அந்த சீரியலில் இருந்து விலகி படங்களில் கமிட்டாகி நடிக்கவுள்ள நிலையில் இப்படி செய்திகள் வெளியாகியுள்ளது எது உண்மை என்று இன்னும் தெரியவில்லை. இன்று பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் லோகோ வெளியாகவுள்ளது என அதிகாரபூர்வமான தகவலாக வளம் வருகிறது.