13 வயதில் ரம்பாவுக்கே அந்த விசயத்தில் டஃப் கொடுக்கும் மகள்.. அடுத்த ஹீரோயின் ரெடி தான்..
90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. அக்கடதேசத்தில் இருந்து தமிழ் பக்கம் வந்த ரம்பா, ரஜினி, விஜய், அஜித், சரத்குமார், கார்த்திக், பிரபு, அர்ஜுன் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.
அதன்பின் இலங்கையை சார்ந்த வெளிநாட்டு வாழ் தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி லண்டனில் செட்டிலாகி மூன்று குழந்தைகளுக்கு தாயாகினார் நடிகை ரம்பா.
அவரது முதல் மகள் 2011ல் ஜனவரி 13 ஆம் தேதி பிறந்ததை அடுத்து தற்போது டீனேஜில் காலெடி எடுத்து வைத்திருக்கிறார். சமீபத்தில் ரம்பா வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் தன் மூன்று குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
தாவணி பாவாடையில் மூத்த மகள் குமரியாக இருப்பதை பார்த்த பலர் ஷாக்காகியுள்ளனர். ஹீரோயின் ஆகும் அளவிற்கு அதுவும் அம்மாவின் உயரத்தை மிஞ்சும் அளவிற்கு உயரமாக இருக்கிறார். விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள்.