நடிகை ரம்பா வீட்டு பக்கத்தில் பெரிய வீடு கட்டும் நடிகர் கமல் ஹாசன்!!
ரம்பா
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை ரம்பா. முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான ரம்பா, இந்திரகுமார் என்ற கனடா வாழ் இலங்கை தமிழரை 2010ல் திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின் கனடாவில் செட்டிலாகிய ரம்பா சினிமாவில் இருந்து விலகி 2 மகள், 1 மகனை பெற்றெடுத்தார். குழந்தைகளை பார்த்துக்கொண்டும் கணவரின் தொழிலில் பங்காற்றியும் வந்த ரம்பா, மீண்டும் இந்தியா பக்கம் வந்திருக்கிறார்.
கமல் சார் பெரிய வீடு
தற்போது சென்னையில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ரம்பா, ஜோடி ஆர்யூ ரெடி 2 சீசன் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். பல பிரபலங்கள் தங்கியிருக்கும் பகுதியில் தான் ரம்பாவின் பிரம்மாண்ட வீடு அமைந்திருக்கிறது.
இந்நிலையில் தன்னுடைய வீட்டை பற்றி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அதில், கமல் சார் பக்கத்தில் பெரிய வீடு கட்டி வருகிறார். சினேகா வீடு இங்கே தான் இருக்கிறது. பிரபுதேவா வீட்டுக்கு அப்பப்ப போவேன் என்று ரம்பா தெரிவித்துள்ளார்.