கணவர் இறந்த நேரத்தில் மீனா சொன்ன விஷயம்!! நடிகை ரம்பா - கலா மாஸ்டர் எமோஷ்னல்
நடிகை ரம்பா
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ரம்பா. திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்றெடுத்து லண்டனில் செட்டிலாகிய ரம்பா, மீண்டும் சென்னைக்கு வந்து புதிய தொழில் தொடங்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோட் 3 நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
கலா மாஸ்டர்
சமீபத்தில் கலா மாஸ்டருக்கு அளித்த பேட்டியொன்றில் நடிகை மீனா கணவர் இறந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதில் கலா மாஸ்டர், என் வாழ்க்கையில் ரம்பாவையும் அவரது கணவரையும் மறக்கவே மாட்டேன் என்று மீனா சொன்னாள்.
மீனா கணவர் மரணத்திற்கு நீ உடனே வந்த, அந்த சமயத்தில் மீனா, அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் ஜெட் லாக்கில் மாட்டிக் கொண்டிக் கொண்டிருப்பார்கள்னு. ஆனால் நீ அடுத்த காலையில் 6 மணிக்கே வந்து பல உதவிகளை செய்ததை மறக்கமுடியாது.
மீனா
அதற்கு ரம்பா, அந்த சமயத்தில் எழுதி இருக்கிறது நாங்கள் வரவேண்டும் என்று. மீனா ரொம்பவே உழைப்பாளி. அந்த சமயத்தில் மீனா அப்பாவும் இறந்திருக்கிறார், அப்போது தைரியமாக இருந்தாங்க. ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் பெண்கள் தானே என்று மிகவும் சாதாரணமாக நினைப்பார்கள்.
ஆனால் அப்படி இருக்க கூடாது. அவர்களுக்கு நாங்கள் அனைவரும் உள்ளோம். அந்த தருணத்தில் நாங்கள் இருந்தது சாகருக்கு நாங்கள் செய்த மரியாதையாகத்தான் பார்க்கிறேன்.
நெருங்கிய நண்பர்கள் தான் என்பதற்காக, இங்கு அழைப்பது என்று அவருக்கு நாங்கள் தொல்லை அளிக்க மாட்டோம். அதே நேரத்தில் ஒரு தோழியாக அவருக்கு நான் எப்போது எல்லாம் இருக்க வேண்டுமோ, அப்போது எல்லாம் நான் மீனாவுடன் இருப்பேன் என்று மீனா எமோஷ்னலாக தெரிவித்துள்ளார்.