அந்த ஆளு லூசு மாதிரி பேசிட்டான்!! வடிவேலுவால் நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ரமேஷ் கண்ணா..
வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன் பல பிரச்சனைகளில் சிக்கி சினிமாவில் இருந்து விலகினார். அதன்பின் மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்த வடிவேலு பற்றி அவருடன் நடித்த பல நடிகர்கள் அவரை விமர்சித்தபடி பேசி வந்தனர்.
ரமேஷ் கண்ணா
சமீபத்தில் நடிகர் ரமேஷ் கண்ணா அளித்த பேட்டியொன்றில், ஆதவன் படத்தில் வடிவேலு செய்த ஒரு செயலை பற்றி பகிர்ந்துள்ளார். ஆதவன் படத்தில் ஒரு காட்சியில் நீ அப்படியே மேல போ ஒரு அம்மா நிறைய பவுடர் போட்டு படுத்து இருக்கும் என்ற டயலாக்கை சூர்யாவிடம், வடிவேலு சொந்தமான டயலாக்கை போட்டுவிட்டார்.
சரோஜா தேவி
இதனால் கடுப்பாகிய நடிகை சரோஜா தேவி அம்மா, எனக்கு போன் பண்ணி, ரமேஷ் கண்ணா நான் உங்ககிட்ட நடிக்க சான்ஸ் கேட்டேனா, நீங்களா என்னை கூப்பிட்டீங்க, நடிக்க வச்சுட்டு இப்படி எல்லாம் டயலாக் போடுறீங்க என்று கேட்டாங்க.
அதற்கு நான் அந்த ஆளு லூசு மாதிரி பேசிட்டான் மா, அது ஒன்னும் தப்பில்லை என்றேன். அதற்கு அவங்க, நான் என்ன மனோரமா மாதிரி காமெடி ஆர்ட்டிஸ்ட்டா, நான் ஒரு ஹீரோயின் என்றெல்லாம் சொன்னாங்க, அதன்பின் பிரச்சனை எப்படியோ சரியாகிவிட்டதாக ரமேஷ் கண்ணா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.