கன்னத்தில் நயன்தாராவை அடிக்க சொன்ன இயக்குனர்... நடிகையை வைத்து பழித்தீர்த்த சம்பவம்
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. அவர் நடிப்பில் பல படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. அதில் இயக்குனர் ராம்நாத் பலனிகுமார் இயக்கத்தில் ஈ மற்றும் திருநாள் படங்களில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

ராம்நாத் பேட்டி
இரு படங்களும் ஓரளவிற்கு பேசப்பட்ட நிலையில் அப்படத்தின் இயக்குனர் ராம்நாத் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஜீவா முதல் நயன் தாராவின் கோபமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், நயன் தாராவிடன் 49 நாட்கள் இரவு பகல் கால்ஷீட் கேட்டு கதையை கூறி கும்பகோணத்தில் ஷூட்டிங் ஆரம்பித்தேன். நானும் ரவுடி தான் படத்தினை முடித்துவிட்டு அடுத்த நாளே கலைப்புடன் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு வந்தார்.
முதல் நாள் இரவு ஷூட்டிங்கில் அவருக்கு உடலில் பிரச்சனை ஏற்பட்டு முடியாமல் போனதை கூறினார். சீக்கிரம் அனுப்பி வைக்க கேட்ட நயன் தாராவை வேண்டும் என்றே 2 மணி வரை ஷூட்டிங்கில் நடிக்க வைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த நாள் ஷூட்டிங்கில் ஒரே ஷெடியூலில் முடித்துவிட்டேன்.

நயனுக்கு பளார்விட்ட நடிகை
அது இண்டர்வெல் பிளாக் சீன் என்பதால், ஜீவா, நயன் தாரா மீது கூரை விழுந்து பெற்றோரிடம் மாட்டிக்கொள்ளும் சீக்வெண்ட்ஸ் காட்சி. அப்போது நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்த நடிகை ரமாவிடம் ஸ்கிரிப்ட்டில் இல்லாத ஒன்றினை செய்ய சொன்னேன்.
நயன் தாராவை பட்டென்று அறையச் சொன்னேன் என்பது தான் அது. அதை கேட்டு கதைக்கு தேவை பட்டது மேடம் என்று ராம்நாத் கூறியுள்ளார். அதெல்லாம் பரவாயில்லை என்று நயன் தாரா ஈடுபாடுடன் இருந்தார் என்று ராம் நாத் கூறியிருந்தார்.