இயக்குனருடன் விவாகரத்து வரை சென்ற காதல் திருமணம்!! ரம்யா கிருஷ்ணன் கூறிய உண்மை..
80-களில் தன்னுடைய சிறுவயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் நடிகை ரம்யா கிருஷ்ணன். லீலாம்பரி, ராஜமாத சிவகாமிதேவி போன்ற இரு கதாபாத்திரம் இன்று வரை ரம்யா கிருஷ்ணனை புகழப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி பேசியிருக்கிறார். சினிமாவில் கலக்கிக்கொண்டு இருந்தவர் கல்யாண வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் இருப்பதை பலரும் முன்வைத்தனர்.

அதை காட்டி குத்தாட்டம் போட்ட தமன்னா!! அம்போன்னு ஸ்கூட்டி கூட தராமல் அசிங்கப்படுத்த இதான் காரணமாம்...
இயக்குனர் கிருஷ்ண வம்சியுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாக மீடியாக்களில் பேசப்பட்டு வந்ததை அறிந்த குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் அவசர அவசரமாக 2003ல் கிருஷ்ணா வம்சியுடன் திருமணம் நடைபெற்றது.
சந்திரலேகா படத்தை இயக்கிய போது தான் கிருஷ்ண வம்சியுடன் காதல் ஏற்பட்டு இருவரும் லிவ்விங் வாழ்க்கையையும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் சண்டை, விவாகரத்து பேச்சு, பிரிவு, மீண்டும் சேருவது, சண்டை என்று மாறி மாறி வாழ்க்கை போக ஒருவழியாக இருவரும் இறுதியில் இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து ஒரு மகனை பெற்றெடுத்து வளர்த்து வந்திருக்கிறோம் என்று ரம்யா கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.