காட்டில் நடந்த ஷூட்!! அதுகூட இல்லாமல் படாதபாடுபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்து தற்போது நீலாம்பரி, ராஜமாதா சிவகாமிதேவி போன்ற கதாபாத்திரங்கள் மூலம் மிகப்பெரிய அந்தஸ்த்தைபெற்றார் நடிகை ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் ரஜினியுடன் பல ஆண்டுகள் கழித்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஷூட்டிங்கில் தான் அனுபவித்த கஷ்டத்தை பற்றி கூறியிருக்கிறார். நடிகைகளுக்கு அவுட்டோர் ஷூட்டிங் சமயத்தில் பெரிய பிரச்சனையாக இருப்பது கழிவறை தான்.
அப்படி ஒரு முறை ஒரு படத்தின் ஷூட்டிங் காட்டில் நடந்தது. அப்போது அங்கு கழிவறை வசதியோ கேரவன் கூட இல்லை. பயங்கர வெப்பம் என்பதால் எனக்கும் கலா மாஸ்டருக்கும் ஹீட்டால் லூஸ் மோஷன் ஆகிவிட்டது.
முறையான கழிவறை வசதி கூட அங்கு இல்லாததால், அதற்காக காட்டுக்குள் தேடி அலையாத இடமே கிடையாது. எப்போது ஷூட் முடியும் என்று காத்திருந்தோம்.
மேலும் பேட்டியில் லூஸ் மோஷன் என்ற வார்த்தையை கட் செய்துவிடுங்கள் என்று கூறியும் அதை அந்த பேட்டியில் ஒளிப்பரப்பும் செய்திருக்கிறார்கள்.