ரசிகர்கள் செருப்பை வீசுனார்கள்! ரஜினி படத்தில் நடந்த உண்மையை உடைத்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..
தமிழ் சினிமாவின் 90களில் 18 வயது ஆரம்பிக்கும் போதே இளம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1983ல் வெள்ளை மனசு படத்தில் ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன் முதலில் கன்னடம் மற்றும் தெலுங்கு நடிகையாக இருந்தார்.
இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தாலும் ஓரளவிற்கு பேசும் நடிகையாக இருந்தார். அவர் கரியேரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து மார்க்கெட்டை உயர்த்திய படம் படையப்பா. ரஜினிகாந்த் நடிப்பில் 1999ல் வெளியான இப்படத்தில் முதலில் மீனா, சிம்ரன், நக்மா என தேர்வு பட்டியளில் கடைசியாக தேர்வாகினார் ரம்யா கிருஷ்ணன்.
இப்படத்தில் வெளியீட்டின் போது அவரது தங்கை படத்தினை தியேட்டரில் பார்க்க சென்றுள்ளார். அப்போது என் காட்சி வந்ததும் திரையில் செருப்பை கழட்டி அடித்தார்கள் என்று கூறினார். இதனால் ரசிகர்கள் என்னை ஏற்றுப்பார்களா என்று கேள்வியாகவே இருந்தது. ஆனால் இதன்பின் நடந்ததே வேறு.
மக்கள் என் மீது செருப்பால் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் எப்படி இருந்திருக்கும் என்று தான் யோசித்தேன். பின் என் கேரியரை மாற்றியதும் படையப்பா படம் இல்லை என்றால் நான்னில்லை என்று கூறுமளவிற்கு தற்போது ராஜ மாதாவாக வாழ்ந்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.