மொட்டை மாடிலாம் வேண்டாம்! BMW காருக்குள் தாவிய ரம்யா பாண்டியன் போட்டோஷூட்..
photoshoot
biggboss
ramyapandian
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பெரியளவில் பேசப்படாத நடிகையாக இருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனால் மொட்டை மாடி போட்டோஷூட் பக்கம் சென்று க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
அதனால் வைரலாகிய ரம்யா பாண்டியன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிளான KPY, குக்வித் கோமாளி, பிக்பாஸ் போன்றவற்றில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருந்தார்.
சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளியானது. தற்போது போட்டோஷூட் பக்கம் திரும்பிய ரம்யா பாண்டியன் காரில் இருந்து வெளியே வருவது போன்று க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.