வாய்ப்புக்காக அந்த மாதிரியான போட்டோஷூட் எடுக்கிறேனா!! உண்மையை உடைத்த ரம்யா பாண்டியன்..

Ramya Pandian
By Edward Jan 29, 2023 09:20 AM GMT
Report

தமிழில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை அடுத்து ஜோக்கர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

வாய்ப்புக்காக அந்த மாதிரியான போட்டோஷூட் எடுக்கிறேனா!! உண்மையை உடைத்த ரம்யா பாண்டியன்.. | Ramya Pandian Open Her Photoshoot For Movie Chance

இதனை தொடர்ந்து மொட்டைமாடி போட்டோஷூட் பக்கம் சென்று இளைஞர்களை தன் பக்கம் இழுக்க கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். பின் குக்வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு இரண்டாம் ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

பின் கலக்கபோவது யாரு 9ல் நடுவராகவும், பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 3 ஆம் ரன்னர் அப் இடத்தினையும் பெற்றார். இதைதொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்று 2ஆம் ரன்னர் அப் இடத்தையும் பெற்றார்.

இதன் மூலம் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த ரம்யா பாண்டியன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வாய்ப்பிற்காக தான் இந்த கிளாமர் போட்டோஷூட் எடுக்கிறீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

எல்லோருக்கும் இந்த கேள்வி தான் அதிகமாக இருக்கு. நான் என் வேலையை பார்க்கிறேன், படம் இல்லைன்னு சொல்றாங்க, ஆனால் எனக்கு படம் வந்துட்டுதான் இருக்கிறது என்றும் இனிமேல் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க ஆரம்பிப்பேன் என்று கூறியுள்ளார்.