என்னை மூன்று வருடமா அப்படி டார்ச்சர் செய்தார்..ரம்யா பாண்டியன் ஓபன் டாக்
2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். ஆனால் இதையடுத்து இவருக்கு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டார். தற்போது ரம்யா பாண்டியன் சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் கல்லூரியில் படிக்கும் போது என்னை ஒருத்தர் பேருந்து நிலையத்தில் ஒருவர் நின்று கொண்டு இருப்பார்.
அவர் நான் கல்லூரிவிட்டு திரும்பி வரும் போதும் அங்கேயே இருப்பார். மூன்று வருடம் என்னை பாலோ செய்தார். ஒரு நாள் என்னிடம் அந்த ப்ரொபோஸ் செய்துவிட்டார். நான் அதுக்கு நோ சொல்லவிட்டேன் என்று ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.