தனுஷுடன் ஒரு கிளிக்! நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்..

dhanush ramyapandian tamilactress
By Edward Dec 27, 2021 10:55 AM GMT
Report

தமிழில் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ஓரளவிற்கு பேசப்பட்ட ரம்யா வாய்ப்பில்லாமல் இருந்தபோது மொட்டை மாடி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்டு கடைசி 5 இடத்தில் இடம் பிடித்தார். பின் ரசிகர்களை பெரியளவில் ஈர்த்த நிகழ்ச்சியான குக்வித் கோமாளி மூலமும் படவாய்ப்புகளை பெற்றார்.

தற்போது நடிகர் தனுஷிடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த படம் இவருடனா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.