4 ஆயிரம் கோடி பட்ஜெட்!! ராமாயணா படத்தில் நடிக்கமாட்டேன்னு சொன்னேன்!! ரன்பீர் கபூர் ஓபன் டாக்...

Sai Pallavi Yash Bollywood Ranbir Kapoor Ramayana
By Edward Apr 05, 2026 12:45 PM GMT
Report

ராமாயணா

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் தான் ராமாயணா. ஏ ஆர் ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் இசையில் இப்படம் வரும் தீபாவளி அன்று முதல் பாகம் ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.

4 ஆயிரம் கோடி பட்ஜெட்!! ராமாயணா படத்தில் நடிக்கமாட்டேன்னு சொன்னேன்!! ரன்பீர் கபூர் ஓபன் டாக்... | Ranbir Kapoor Reveals Why Rejected Ramayana Lord

இந்நிலையில் படத்தில் ராமர் ரோலில் நடித்து வரும் ரன்பிர் கபூர் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ராமாயணா வாய்ப்பை நிராகரித்தது குறித்து பகிர்ந்துள்ளார்.

நடிக்கமாட்டேன்னு சொன்னேன்

அதில், சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா இந்த ரோலில் நடிக்க தன்னை அணுகியபோது உடனடியாக நான் இதில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டேன். நான் இதற்கு பொருத்தமானவன் அல்ல, என்னால் அந்த கதாபாத்திற்கு முழுமையான நியாயம் சேர்க்க முடியாது என்று அவரிடம் கூறினேன். ஆனால் அந்த பயம் விரைவில் நன்றியுணர்வாக மாறியது.

4 ஆயிரம் கோடி பட்ஜெட்!! ராமாயணா படத்தில் நடிக்கமாட்டேன்னு சொன்னேன்!! ரன்பீர் கபூர் ஓபன் டாக்... | Ranbir Kapoor Reveals Why Rejected Ramayana Lord

ஏனென்றால் இதுபோன்ற வாய்ப்புகள் என் வாழ்க்கையில் எனக்கு உண்மையிலேயே தேவைப்பட்டது. இந்த ரோல் மீதும் ராமாயணக் கதையின் மீதும் எனக்கு அளவற்ற அன்பும் மரியாதையும் இருக்கிறது. ராமர் கதாபாத்திரத்திற்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்து இந்த படத்தில் நடித்தேன் என்று ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.