கர்ஜிக்கும் யஷ்..ரன்பீரின் ராமாயணா டிரைலர் எப்படி இருக்கு...

Rakul Preet Singh Sai Pallavi Yash Ranbir Kapoor Ramayana
By Jai Jul 30, 2026 04:45 AM GMT
Report

ராமாயணா

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ராமாயணா. ராமனாக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், அனுமனாக சன்னி தியால், லட்சுமணனாக ரவி துபே உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 2026 தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ஜூலை 19 ஆம் தேதி ராமாயணா படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் டிரைலர் எப்போது வெளியாகும் என்று குறிப்பிடவில்லை.

கர்ஜிக்கும் யஷ்..ரன்பீரின் ராமாயணா டிரைலர் எப்படி இருக்கு... | Ranbir Sai Yash Ramayana Tamil Trailer Video

டிரைலர்

தற்போது ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை 4.15 மணியளவில் ராமாயணா டிரைலர் அனைத்து மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது. இரு பாகங்களாக வெளியாகவுள்ள ராமாயணா படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டு உருவாகியுள்ளது.

ராமாயணா டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ ராமாயணா பட டிரைலர்...