கேட்பாரற்று மரணமடைந்த வயதான நடிகை! வறுமையில் வீடில்லாமல் உறவினர் வீட்டில் இறுதி சடங்கு

Tamil Cinema
By Parthiban.A Apr 29, 2022 09:30 PM GMT
Report

''போறது தான் போற அந்தநாயை சூ..னு சொல்லிட்டுப் போ" என சொல்லி நாயை கடிக்கவிட்டு வடிவேலுவை ஹாஸ்பிடலுக்கு அனுப்பி கமிஷன் வாங்கும் காமெடியில் நடித்திருந்தவர் ரங்கம்மா பாட்டி.

500 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அவர் கடும் வறுமையால் கடந்த சில வருடங்களாக வாடி வந்தார். அவர் மெரினா பீச்சில் கர்சீப் விற்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிக் கடும் அதிர்ச்சி கொடுத்தது. அதன் பின் சிலர் அவருக்கு உதவி செய்தனர்.

கேட்பாரற்று மரணமடைந்த வயதான நடிகை! வறுமையில் வீடில்லாமல் உறவினர் வீட்டில் இறுதி சடங்கு | Rangamma Patti Is No More

வறுமையால் தங்க வீடு, உணவு இல்லாமல் தவிப்பதாகவும், அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் தான் ரங்கம்மா பாட்டி கேட்டிருந்தார். வீடில்லாமல் அவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் காலமானார். அவரது இறுதி சடங்கும் உறவினர் ஊரிலேயே நடைபெற்று இருக்கிறது.