எனக்கு இன்னும் ரெண்டு வேண்டும்!! ஜாய் கிரிஸில்டாவிடம் விஜய் என்ன கேட்டாரு தெரியுமா?..
ஜாய் கிரிஸில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டா பற்றிய விவகாரம் தான் டாப் ஹைலெட் நியூஸாக சமீபகாலமாக இருந்து வருகிறது. தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவருடன் நெருக்கமாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை ஜாய் இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பலர் விமர்சித்து பேசியநிலையில், விஜய்யுடன் ஜாய் கிரிஸில்டா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஜாய் கிரிஸில்டா அப்போது அளித்த பேட்டியொன்றில், மெர்சல் படத்தில் பணியாற்றினேன். அப்போது பிஸ்தா க்ரீன் கலரில் ப்ளெய்ன் சட்டை ஒன்றை விஜய் போட்டிருப்பார். அந்த சட்டையை நான் எடுக்கும்போது அதன்விலை 1200 ரூபாய் தான். அவர் ரேஞ்சுக்கு கம்மிதான். இதனை அவர் யூஸ் செய்வாரா என்றுதான் யோசித்தேன்.

ஆனால் அவர் அதையெல்லாம் யோசிக்காமல் சட்டையை போட்டு பார்த்தார். பின் அவருக்கு ரொம்பவே பிடித்துவிட, உடனே என்னிடம் அவர், இந்த மாதிரி சட்டை இன்னும் இரண்டு எனக்கு வேண்டும் என்று கேட்டார். உடைகளை பொறுத்தவரை விஜய்க்கு பிராண்ட், எவ்வளவு விலை என்பதெல்லாம் பெரியதாக கண்டுக்கொள்ளமாட்டார் என்று ஜாய் கிரிஸில்டா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.