விஜய் தேவரகொண்டாவிடம் ராஷ்மிகா சொன்ன அந்த வார்த்தை.. காதலை உறுதி செய்த பதிவு?
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவது குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால், இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நேற்று அவரது 36 - வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
அந்த வார்த்தை
இதை தொடர்ந்து, நடிகை ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "மீண்டும் நான் தாமதமாக உனக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜ்ஜு. உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்கள், ஆரோக்கியம், அன்பு, மகிழ்ச்சி என அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு விஜய் தேவரகொண்டா மிகவும் அழகான பதிவு என்று கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.