தலைக்கனம் பிடித்த ராஷ்மிகா! தளபதி விஜய்யிடமே அப்படி நடந்து கொண்டாரா

Vijay Rashmika Mandanna
By Parthiban.A Jun 11, 2022 04:20 PM GMT
Report

தற்போது விஜய் 66 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவர் தளபதி விஜய் உடன் நடிப்பது தனது கனவு என நீண்ட நாட்களாக கூறி வந்த நிலையில் அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டது.

தளபதி 66 பூஜை அன்று அவர் விஜய் உடன் நின்று கொடுத்த ரியாக்ஷன் பெரிய அளவில் வைரல் ஆனது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 66ல் ராஷ்மிகாவின் ரோல் என்ன என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. தலைக்கனம் பிடித்த பெண்ணாக தான் ராஷ்மிகா நடிக்கிறாராம்.

அதிக சுயநலம் மற்றும் தலைக்கனம் பிடித்த பெண் ரோலில் நடிக்கிறேன் என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அப்படி நடிப்பது இதுவே முதல்முறை என்பதால் தனக்கு நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.

விஜய்யை அதிகம் வம்பிழுக்கும் கதாபாத்திரமாக ராஷ்மிகா அந்த படத்தில் இருப்பார் என தெரிகிறது.