30 நிமிஷத்துக்கு 1 கோடியா? சமந்தாவால் தயாரிப்பாளர்களை அதிரவைத்து நடிகை..
தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பெரியளவில் பேசப்பட்ட நடிகையாக இருந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதையடுத்து அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்தார். சமீபத்தில் நடிகர் அல்லுஅர்ஜுனுடன் ஜோடிபோட்டு 300 கோடி வசூலை பெற்றார்கள்.
இப்படத்திற்கு பின் மார்க்கெட் உயர்ந்ததால் 5 கோடி அளவில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் ராஷ்மிகா. இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரணின் ஆர்15 படத்தில் சிறப்பு கதாபாத்திரத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அப்படத்தில் ராம் சரணை பேட்டியெடுக்கும் 30 நிமிட காட்சியில் நடிக்க சுமார் 1 கோடி அளவில் சம்பளமாக கேட்டுள்ளாராம். இதனால் அதிர்ச்சியில் தயாரிப்பாளர் இருந்துவருகிறார்.
ஏற்கனவே கியாரா அத்வானி, அஞ்சலி நடிகைகளாக கமிட்டாகியுள்ளதே பெரிய சம்பளமாக இருந்ததை அடுத்து படக்குழு யோசித்து வருகிறார்கள். க்ளாமர் ஆட்டம் சீன்ஸ் என்றால் ஓகே சம்பளம் அவ்வளவு கேட்கலாம் என்று தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.