ஷூட்டிங்கில் வாரிசு நடிகை தூங்கும் போது விஜய் செய்த செயல்!! புட்டுபுட்டு வைத்த ராஷ்மிகா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழும் நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சில ஸ்வரஸ்யமான விசயத்தை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
ஷூட்டிங்கில் நான் நாற்காலியில் அமர்ந்து பக்கத்தில் இருந்த டேபிளில் தலையை சாய்த்து தூங்கிவிட்டேன். இதை பார்த்த விஜய் இயக்குரிடம், இங்கே பாருங்க.. ஷூட்டிங் வருகிறார்.. சாப்பிடுகிறார்... தூங்குகிறார் அதை அடுத்த நாளும் செய்கிறார்.
இது தான் வாரிசு படத்தின் அவரது பங்களிப்பா என்று போட்டுக்கொடுத்தார். படத்தில் எனக்கு அவ்வளவாக ஸ்கோப் இல்லை.
ஆனால் விஜய்க்காக மட்டுமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றும் அவருக்காக தான் டேட் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் எனக்கான காட்சிகள் இல்லை என்றால் நான் என்ன செய்வது தூங்கிவிட்டேன்.
விஜய் செய்ததை நான் மறக்கவே மாட்டேன் இப்படி விஜய் சார் பண்ணுவார் என்று நினைக்கவில்லை என்று விஜய் பற்றி ஓப்பனாக கூறியிருக்கிறார்.