காலில் கட்டோடு விருதுவிழாவில் ஆட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா!! வீடியோ..
Rashmika Mandanna
Tamil Actress
Actress
By Jai
ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் புஷ்பா, அனிமல் மற்றும் சாவா ஆகிய மூன்று திரைப்படங்களும் தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

ஆனால், கடைசியாக வெளிவந்த சிக்கந்தர் படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேஷனல் க்ரஷ் என இளைஞர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தனுஷின் குபேரா படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ராஷ்மிகாவின் காலில் முறிவு ஏற்பட்டதால் நடக்கக்கூட முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு வந்தார். தற்போது ஒரு விருதுவிழாவிற்கு சேலையில் சென்ற ராஷ்மிகா, கால்முறிந்த காலோடு நடனமாடியிருக்கிறார்.