ராஷ்மிகாவின் எக்கச்சக்க காதல்!!! திருமணத்திற்கு பின் எப்படி எல்லாம் வாழ ஆசைப்படுகிறார் தெரியுமா?
ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ராஷ்மிகா தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் 'தி கேர்ள்ஃபிரண்ட்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியானது.
திருமணத்திற்கு பின்
கணவராக வருகிறவர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் என் பக்கத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் நல்லவர் ஒருவர் தான் வேண்டும். என்னுடன் ஒரு போர் நடந்தால் அதில் எனக்கு துணையாக இருப்பவர் தான் வேண்டும்" என்று தெரிவித்திருந்தார் ராஷ்மிகா.

மேலும், திருமணம் என்பது வெறும் மோதிரங்கள் மாற்றிக்கொள்வது மட்டுமின்றி, இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை, பாசம், நம்பிக்கை, இருக்க வேண்டும் ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட இடத்தை வழங்க வேண்டும்.
அன்புடனும், நட்புடனும், புரிதலுடனும் மட்டுமே இருவரும் ஒருவராக முடியும் என்று கூறியிருக்கிறார் ராஷ்மிகா. அவரின் இந்த கருத்து பலரது கவனத்தையும் பெற்று பாராட்டுகளை பெற்றும் வருகிறது.