மன்னிப்பு கேட்டும் விஜய்யால் ராஷ்மிகா மந்தனாவுக்கு வந்த சோதனை!! வெச்சு செய்த நெட்டிசன்கள்..

Vijay Trisha Rashmika Mandanna Gossip Today
By Edward Dec 23, 2024 05:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்தியா சினிமாவின் நேஷ்னல் கிரஷ் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் தியேட்டரில் பார்த்த முதல் படம் குறித்து பகிர்ந்துள்ளதை வைத்து விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

மன்னிப்பு கேட்டும் விஜய்யால் ராஷ்மிகா மந்தனாவுக்கு வந்த சோதனை!! வெச்சு செய்த நெட்டிசன்கள்.. | Rashmika Mandhana Gets Teased By Netizens

ராஷ்மிகா - கில்லி

அதில், உங்களுக்கு நான் ஏன் தளபதி விஜய் சாரை அந்தளவிற்கு நேசிக்கிறேன் என்ற காரணம் தெரியுமா?. நான் தியேட்டரில் பார்த்த முதல் படம் கில்லி தான். நாம் பெரிய ஸ்கிரீனில் பார்த்த முதல் ஹீரோ விஜய் சார் தான். மேலும் பேசிய ராஷ்மிகா, சமீபத்தில் தான், கில்லி படம் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதை நான் தெரிந்துக்கொண்டேன். எனக்கு தெரிந்து அது போக்கிரி படத்தின் ரீமேன் என்று நினைக்கிறேன், ஆனால் படம் பார்க்கும்போது எனக்கு எதுவும் தெரியாது.

மன்னிப்பு கேட்டும் விஜய்யால் ராஷ்மிகா மந்தனாவுக்கு வந்த சோதனை!! வெச்சு செய்த நெட்டிசன்கள்.. | Rashmika Mandhana Gets Teased By Netizens

நான் மிகவும் கொண்டாட்டத்துடன் படம் பார்த்தேன். கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடலை மிகவும் ரசித்தேன். அந்த பாடல் ஓமை காட், என் வாழ்நாளின் பெரும்பகுதியில் அந்தப் பாடலை மட்டுமே பாடிக்கொண்டிருந்தேன். என் அப்பா ரஜினி சார் படங்களை பார்ப்பார், ஆனால் என்னை பொறுத்தவரை விஜய் - திரிஷா தான் திரையில் பார்த்த முதல் நடிகர்கள், அவர்களை இன்றும் நான் காதலிக்கிறேன் என்று ராஷ்மிகா கூறியிருந்தார்.

மன்னிப்பு கேட்டும் விஜய்யால் ராஷ்மிகா மந்தனாவுக்கு வந்த சோதனை!! வெச்சு செய்த நெட்டிசன்கள்.. | Rashmika Mandhana Gets Teased By Netizens

நெட்டிசன்கள் ட்ரோல்

இதனை கண்ட நெட்டிசன்கள் ராஷ்மிகாவை ட்ரோல் செய்து டிரெண்ட் செய்யத்துவங்கியுள்ளனர். கில்லி 2004ல் வெளியானது என்றும் இந்தப் படம் 2003ல் வெளியான மகேஷ் பாபுவின் ஒக்கடு படத்தின் ரீமேக், தமிழில் விஜய் தான் போக்கிரி படத்திலும் நடித்தார். போக்கிரி படம் 2006ல் தெலுங்கில் வெளியான ரீமேக் படம் தான். தமிழில் போக்கிரி படம் 2007ல் வெளியாகியது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

ராஷ்மிகா மன்னிப்பு

இதையறித்த ராஷ்மிகா, அதாவது மன்னிக்கவும், இது என் தவறு, இருந்தாலும் விஜய்யின் எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் பரவாயில்லை, கில்லி ஒக்கடுவின் ரீமேக் என்பதையும், போக்கிரி - போக்கிரி படத்தின் ரீமேக் என்பதையும் மக்கள் சமூக ஊடகங்களில் சுட்டிக்கட்டுவார்கள் என்பதையும் நேர்காணலுக்கு பின் தான் உணர்ந்தேன் என்று ராஷ்மிகா மன்னிப்பு கேட்டு ட்விட் போட்டுள்ளார்.