திருமணத்திற்கு முன் காதலர் குடும்பத்துடன் ராஷ்மிகா outing.. வைரலாகும் புகைப்படம்

Vijay Deverakonda Rashmika Mandanna Pushpa 2: The Rule Actress
By Bhavya Dec 07, 2024 12:45 PM GMT
Report

ராஷ்மிகா - விஜய் தேவர்கொண்டா 

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக தற்போது வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்த படங்கள் பல்வேறு விமர்சனங்களை தாண்டி பெரிய வசூலை குவித்து இருக்கிறது.

ராஷ்மிகா தெலுங்கு ஹீரோ விஜய் தேவர்கொண்டா உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வரும் புகைப்படங்கள் ஆதாரங்களுடன் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகின்றன.

திருமணத்திற்கு முன் காதலர் குடும்பத்துடன் ராஷ்மிகா outing.. வைரலாகும் புகைப்படம் | Rashmika Outing With Vijay Family

அதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஷ்மிகா புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தன் காதலர் குறித்து அனைவருக்கும் தெரியும் என்று கூறி பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதனால் அவர் விஜய் தேவர்கொண்டா உடன் காதலில் இருப்பதை மேடையில் மறைமுகமாக போட்டுடைத்து உறுதி செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் புஷ்பா 2 படம் வெளிவந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வைரலாகும் புகைப்படம் 

இந்நிலையில், விஜய் தேவர்கொண்டா குடும்பத்துடன் ராஷ்மிகா புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றுள்ளார். அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

திருமணத்திற்கு முன் காதலர் குடும்பத்துடன் ராஷ்மிகா outing.. வைரலாகும் புகைப்படம் | Rashmika Outing With Vijay Family