சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? க்ரிஞ் என அழைக்கும் ரசிகர்களால் ராஷ்மிகா வருத்தம்
ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வாரிசு படம் வெளிவந்தது.
நடிகை ராஷ்மிகா அண்மையில் படத்தின் ப்ரோமோஷன் விழா ஒன்றில் கலந்துகொண்டு மனமுடைந்த சில விஷயங்களை பேசினார்.
அவர் கூறியதாவது :
'சில நேரங்களில் என உடலால் மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகிறேன். நான் ஒர்கவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் தவறு, ஒர்கவுட் செய்து ஒல்லியாக ஆனாலும் தவறு. நான் ஓவராக பேசினாலும் க்ரிஞ் என்று கூறுகிறார்கள். பேசவில்லை என்றால் இந்த பொண்ணுக்கு அதிக திமிரு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
நான் என்னதான் செய்வது, சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? இல்லை வேண்டாமா? என்னிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், என்னிடம் அதை தெளிவாக கூறிவிடுங்கள். என்ன தவறான முறையில் நினைக்காதீர்கள். உங்களுடைய வார்த்தைகள் மனரீதியாக துன்புறுத்துகிறது' என பேசியுள்ளார் ராஷ்மிகா.