நடிச்சது ரெண்டே படம்!! அந்த விசயத்தில் நயன், சமந்தாவை ஓரங்கட்டிய திருமணமாகாத நடிகை..
தென்னிந்திய சினிமாவில் 10 வருடங்களை கடந்து முன்னணி இடத்தினையும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்தையும் பிடிக்க பல நடிகைகள் போராட்டி வருகிறார்கள்.

ஆனால் தற்போது நடிகைகள் அறிமுகமாகி ஒருசில படங்களில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் டாப் இடத்தினை பிடித்துவிடுகிறார்கள்.
அப்படி 20 ஆண்டுகளாக பயணித்த நயன் தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் 5 கோடி சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்தினை பிடிக்க பல படங்களின் வெற்றி தோல்விகளை சந்தித்திருந்தார்.
அதேபோல் நடிகை சமந்தாவும் பல பிரச்சனைகள் நோய் தாக்குதல் என்று சந்தித்து இந்த இடத்தினை பிடிக்க 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் தற்போது தான் 5 கோடி அளவில் சம்பளம் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்களை மிஞ்சும் வகையில் நடிகை ராஷ்மிகா நடித்த ரெண்டே தமிழ் படத்தின் மூலம் 5 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.
நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்காக தயாரிப்பாளர் தில் ராஜு 5 கோடியை வாரி இறைத்திருக்கிறார். ஆனால் படத்தில் அவரின் ரோல் சில நிமிட காட்சிகளும் ஒரிரு பாடல்களுக்கும் 5 கோடி சம்பளம் கொடுத்துள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.