அந்த விசயத்தில் சிக்கிய நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்!! விஜய் பெயர் கொண்ட நடிகருடன், வாரிசு நடிகை நிச்சயம்..
சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் ரகசியமாக வைத்திருக்கும் பல விசயங்கள் வெளியில் எப்படியாவது கசிந்து அவர்களின் பெயரையே உடைத்துவிடும். அப்படி தான் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை நயன் தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஆரம்பத்தில் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியானதில் அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது.
அதாவது நயன் - விக்னேஷ் சிவன் காதலிக்கும் போது இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர் என்ற தகவல் பரவியது. இதற்கு இருவரும் விளக்கம் அளிக்காமல் தங்கள் வேலைகளில் கவனமாக இருந்து வந்தனர். அதன்பின்பும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
அதேபோல் கீர்த்தி சுரேஷையும் இந்த வதந்தி விடவில்லை. நயன் தாராவுக்காவது காதல் வந்த பின் திருமணம் என்று வதந்தி வந்தது. ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் சிங்கிளாக இருக்கும் போது விரைவில் திருமணம் என்று இவர் தான் மாப்பிள்ளை என்றும் செய்திகள் பரவியது.
இதற்கு அவர்து அப்பா சுரேஷ், அம்மா மேகனாவும் பலமுறை விளக்கம் அளித்து அந்த வதந்தி செய்தி நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே சென்றது. தற்போது அவர்களின் இந்த வதந்தி லிஸ்ட்டில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சேர்ந்துவிட்டார். சமீபத்தில் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக பல காலமாக பேசி வருகிறார்கள்.
இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்றாலும் ரகசியமாக மாலத்தீவு, பார்ட்டி என்று சுற்றி வருகிறார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர்களின் காதல் பேச்சு தீவிரமடைந்து வந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக செய்திகள் கசிந்து தீயாக பரவி வருகிறது. இதுதொடர்பாக விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து நிச்சயதார்த்தம் என்ற தகவலில் உண்மை என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.