ஆணவத்தில் தலைக்கால் புரியாமல் ஆடிய ராஷ்மிகா!! துரத்திவிட்ட பிரம்மாண்ட இயக்குனர்
இந்திய சினிமாவில் நேஷ்னல் கிரஸ் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவுன் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமாகி குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக தெலுங்கு சினிமாவில் திகழ்ந்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா - வாரிசு
சமீபத்தில் சர்தார் படத்திற்கு பிறகு தமிழில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா 3 கோடி சம்பளமாக ஒரு படத்திற்காக பெற்று வந்துள்ளார்.
புஷ்பா படத்தின் மூலம் அவரது மார்க்கெட் ஏறியதால் அவரது சம்பளத்தை 2 கோடி ஏற்றி 5 கோடியாக வாரிசு படத்தில் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராம் சரணின் 15 வது படத்தினை 170 கோடியில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார்.

5 கோடி சம்பளம்
ஏற்கனவே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். இப்படத்தில் இரண்டாம் கதாநாயகுயாக ராஷ்மிகா மந்தனாவிடம் ஊடகத்துறையை சேர்ந்த ஒரு ரோலில் நடிக்க கேட்டுள்ளார் இயக்குனர் சங்கர்.
அதற்காக ராஷ்மிகா 5 கோடி சம்பளமாக கேட்டதற்கு சங்கர் கோபத்தில், லீட் ரோலில் நடிக்கும் பாலிவுட் நடிகை கியாராவுக்கே 4 கோடி தான் சம்பளம். தென்னிந்தியாவில் ஒருசில படங்களே நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகும் ராஷ்மிகாவுக்கு தரமுடியாது என்று ஓரங்கட்டி இருக்கிறார்.
தலைக்கால் புரியாமல் ஆடினால் இப்படித்தான் பல நடிகைகள் வாய்ப்பினை இழக்கிறார்கள் என டோலிவுட்டில் வட்டாரத்தில் ராஷ்மிகாவை கலாய்த்து வருகிறார்கள்.