ராவணன் கெட்டவன் கிடையாது..சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதில் ராமாயணா படம் ரிலீஸாகவுள்ளது. 2000 கோடி, 4000 கோடி பட்ஜெட்டில் இரு பாகங்களாக உருவாகியுள்ள ராமாயணா படத்தில் சீதையாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

சாய் பல்லவி
சீதையாக நடித்த சாய் பல்லவியை பாலிவுட்டில் விமர்சித்து வந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சாய் பல்லவி மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
ஸ்பெஷல் ப்ரீமியர் நிகழ்ச்சியில், ராவணன் அவ்ளோ கெட்டவன் கிடையாது. நம் ஒவ்வொருக்குள்ளும் ராவணன் ஒளிந்திருக்கிறான், அவனை சரியாக கண்டு பிடித்து நம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சாய் பல்லவியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
Sai Pallavi at #RamayanaPart1 LA premiere : "Ravana is not all bad"👀 "It's important that we spot ravana in us and we make changes over time" Controversial take 🫠 https://t.co/qyYDlT7R9x
— MR. SP (@Lonely_Prabhhh) October 28, 2026