மாலையும் கழுத்துமாக ரவி மோகன் - அவரது தோழி கெனிஷா!! எங்க போயிருக்காங்க தெரியுமா?
ரவி மோகன் - கெனிஷா
கோலிவுட் சினிமாவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் நடிகர் பெயராக இருப்பது ரவி மோகன். மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போகிறேன் என்ற அறிக்கை வெளியிட்டது முதல் தற்போது வரை அவரின் விஷயங்கள் இணையத்தில் விவாதபொருளாக மாறியிருக்கிறது.
சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷின் மகள் திருமணத்தின் போது, தன்னுடைய கிசுகிசுக்கப்படும் கெனிஷாவுடன் ஜோடியாக கைக்கோர்த்தபடி ரவி மோகன் வந்தது பெரியளவில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்த்தி, விவாகரத்து வழக்கில் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்ற கோரிக்கையை கேட்டிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரவி மோகன் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை துவங்கியிருக்கிறார்.
மாலையும் கழுத்துமாக
இந்நிலையில் ரவி மோகனும் கெனிஷாவும் மாலையுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இருவரும் குன்றக்குடி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன திடீர்னு மாலையும் கழுத்துமாக இருக்காங்க, விவாகரத்து கேஸ்கூட முடியலையே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.